-->

History of Tajmahal in tamil- உலக அதிசயம் தாஜ்மகாலின் வரலாறு தமிழில்

2 minute read
கட்டிடக் கலையின் சிறந்த உதாரணமாகவும், காதலின் அடையாள சின்னமாகவும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது தாஜ்மஹால். உலகின் புது ஏழு அதிசயங்கள் 2007,ஜூலை 7 அன்று போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டது. இதற்காக பத்துக் கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக, மற்றும் தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாக வைத்து செயல்படும் "New 7 Wonders "அறக்கட்டளை தெரிவித்தது. இந்த மாபெரும் கருத்துக்கணிப்பின் படி சீனப் பெருஞ்சுவர், மச்சு பிச்சு உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க சின்னங்களோடு  தாஜ்மஹாலும்  உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டது. அது பெரிய ஆச்சரியமாகவோ, அதிசயமிக்க  அதிர்வுகளையோ ஏற்படுத்தியிருக்கவில்லை , காரணம் தாஜ்மஹாலை உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது கட்டப்பட்ட போதே உலக அதிசயம் தான் என்று.
 
History of tajmahal in tamil


தாஜ்மகால்:

தாஜ்மஹால் உலக அளவில் பலருக்கு தெரிந்த, பலரையும் வியப்படைய வைக்கும் இந்தியாவிலுள்ள அதிசயங்களுள் ஒன்றாகும். இது டெல்லிக்கு தெற்கே உத்திரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ்மஹாலும் ஒன்று. இந்தக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால் இறந்துப் போன அவரது இளம் மனைவி மும்தாஜ்க்குகாக  22000 பணியாளர்களைக் கொண்டு , கி.பி 1631-1654 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. கி.பி 1631 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசை ஆண்ட ஷாஜகான் மனைவி மும்தாஜ் அவர்கள் இறந்துப்போனார். இதனால் பெரும்துயரமடைந்த ஷாஜகான் அவரது நினைவாக இந்தக் கட்டிடத்தை கட்டியதாகவே, அவரது வரலாற்று கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மஹாலின் கட்டிட வேலைகள் தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. முதன்மைக் கட்டிடம் கி.பி 1648 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. வெளிப்புற கட்டிடங்கள், குறிப்பாக பூங்கா முதலிய கட்டிடங்களின் வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவடைந்ததாகவும் வரலாறு கூறுகிறது. 

கட்டிடக்கலை:

தாஜ்மகால் பாரசீகக் கட்டிடக்கலை, முகலாய கட்டிடக்கலை ஆகியவற்றை உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு ஷாஜகான் வெண்ணிற சலவைக்கற்களை பயன்படுத்தியுள்ளார். தாஜ்மஹாலின் மையம் வெண்ணிற சலவைக்கற்களால் ஆன சமாதிக் கட்டிடம் ஆகும். இது ஒரு பெரிய குவிமாடத்தையும் உள்ளடக்கியது. இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லா பக்கங்களிலும் சமச்சீரானது. கட்டிடத்தின் முதன்மை பகுதியில் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் அவர்களின் போலியான அடக்கப்பேழைகள் வைக்கப்பட்டுள்ளது. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் அதற்கு கீழ்த் தளத்திலே உள்ளது. அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள தூண் போன்ற கோபுர  அமைப்புகள் 400 மீ உயரத்திற்கு எழுந்து நிற்கின்றன. தாஜ்மஹாலின் வெளிப்புற அமைப்பு , பிற முகலாய கட்டிடங்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தக் கட்டிடத்தின் வெளிப்புற அழகு, வண்ணப்பூச்சு, சாந்தப்பூச்சு, கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ, பிற விழங்கு உருவங்களையோ அழகூட்டலில் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க , அழகூட்டலில் வனப்பெழுத்துக்களும், செடி ,கொடி வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துகள் "துளு" என்னும் மொழியை சார்ந்தது. இவற்றை பாரசீகக் வனப்பெழுத்து கலைஞரான அம்மாணத்கான் உருவாக்கியுள்ளார். தாஜ்மஹாலின் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் தெற்கு பக்கம் பூங்காவை நோக்கியுள்ள வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.கட்டிடத்திற்கும், நுழைவு வாயிலுக்கும் இடையில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. 

சர்ச்சைகளும், அதிசயங்களும்:

பாரசீகக் கட்டிடக்கலையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாரசீக பூங்காக்கள், இந்தியாவில் முகலாயப் பேரரசர் பாபரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தாஜ்மகால் கட்டப்பட்ட நிலப்பகுதியானது சிற்றரசர் ஜெயசிங் என்பவருக்கு சொந்தமானது. இதைப் பெறுவதற்காக மன்னர் ஷாஜகான், அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் நிலப்பகுதியை விட்டுக்கொடுத்து இப்பகுதியை வாங்கியதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ 3 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட தாஜ்மகால் பகுதியானது, அப்போது ஆற்று மட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 மீட்டர் உயரத்திற்கு மண்ணால் நிரப்பப்பட்டது. தாஜ்மஹாலின் பிரம்மாண்டத்திற்கு , சிறிதும் சழைத்தது அல்ல அதனை மீதான சர்ச்சைகளும், நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும். தாஜ்மகால் மீதான சர்ச்சைகள் செவி வழியாக பரவி, அது ஒரு இந்து மன்னனால் கட்டப்பட்டது என்பது முதல் அது சிவன் கோயிலாகும் என்பது வரை பல சர்ச்சைகள் இன்றும் ஓய்ந்தப்பாடில்லை. தாஜ்மகால் கட்டியப் பேரரசர் ஷாஜகான் தாஜ்மாஹாலைப் போலவே இன்னொரு தாஜ்மாஹாலையும் கட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாரம் , ஆனால் அது இந்த தாஜ்மகால் போல் வெண்பளிங்கு கற்களால் இல்லாமல் கருப்பு பளிங்கு கற்கலால் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஷாஜகான் அவர்களுக்கு இருந்ததாக கூறுகிறது உத்திரபிரதேச மாநில அரசின் தாஜ்மகால் வலைதளம். இந்த தாஜ்மகால் மும்தாஜ் அவர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய-இஸ்லாமிய கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக தாஜ்மகால் கூறப்படுகிறது.

முகலாயர்கள் இந்தியாவை ஆண்டதன் நினைவுச் சின்னமாக இன்று தாஜ்மகால் விளங்கி வருவது மட்டுமல்லாமல், 20000 இந்தியர்களைக் கொண்டு கட்டப்பட்டதன் காரனமாக இந்திய மக்களின் உழைப்பால் தாஜ்மகால் விளங்கி வருகிறது.